Tuesday, August 25, 2020

அம்மாவின் இடை......

ஓர் சிசுவையும் சக்கரவர்த்தியாய் உணர்த்துவாள்,
பச்சிளம் குழந்தையிடம் இப்பூமி ஆள சொல்வாள் ; 

 உன் இடையில் அமர்ந்து நான் கண்ட உலகோ பெரிது, 
அனால் உன் உலகை உன் இரு கைகளுக்குள் ஓர் சிறிய இடையில் உன் பிள்ளையாய் அமர்த்திய நீயோ, மானிடம் கண்ட அரிது;

சுடிதார் அணிந்த உன்னை நேர்த்தியாக புடவை கட்டுபவள் என மாற்றியது பெண்மை என்றாலும்,
ஓர் பெண்ணாக இருந்த உன்னை என் கண் கண்ட தேவதையாய் என்னிடம் தந்தது உன் தாய்மை தான்;

மார்போடு என்னை அணைத்து தட்டி கொடுக்காதே என் சேலை கட்டிய அழகியே,
உன் இடையில் அமர்ந்து உன் முகம் பார்த்த படியே உறங்க ஆசை எனக்கு;

தொட்டிலில் என்னை தாலாட்டுவதை நிறுத்திக்கொள்-ஆம் ஆணை இடுகிறேன், செல்லமாய்;
உன் குரல் கேட்டு ரசிப்பதா, இல்லை ராகம் மதித்து உறங்குவதா என்று குழம்பி போகிறேன்;

நான் வந்து ஆறு மாதம் ஆனதென,
நான் நடக்கும் வயது வந்து விட்டதென நீ குதிக்கும் ஆட்டத்தில்,
உன் இடை சிம்மாசனத்தை விட்டு பிரியும் வலியையும் நான் மறந்தேனடி கண்ணம்மா;
என் அம்மா;

மீண்டும் நான் சிறியவன் ஆவது சாத்தியமற்றதேனிலும்,
என்றும் நீ என் புடவை உடுத்திய சிம்மாசனம் தான்;
நான் நடந்து வென்ற பின்,என்னை நீ அணைக்கும் வேளையில்,
ஒன்றை உணர்ந்தேன்:

"உன் இடை சிம்மாசனம் உடையவில்லை;
நெற்றியில் உன் முத்தம் கிரீடமென உடன் இருக்க,
இவ்வுலகை ஆள செல்கிறேன்,
என் அம்மாவின் முத்தங்களோடு"

பாதம் தொட்டு முகம் காணாமல் வாங்குவது ஆசிர்வாதம் என்றால்,
முகம் பார்த்து கண்கள் முட்டி நெற்றியில் முத்தம் வாங்குவதை வேறு எவனும் என்னை போல் உணர்ந்ததில்லை என்று அறிகிறேன்!!

ஆறு மாத குழந்தையா இப்படி பேசுகிறது என்று ஆச்சர்யம் கொள்ள வேண்டாம்;
அம்மாவின் இடையை வர்ணிக்க வயது தேவையில்லை;
அவள் கருவில் சிசுவாய் வரம் கொண்டால் போதும்;
உயிர் கொடுத்து, புடவை உடுத்தி, பாலூட்டி, சிம்மாசனத்தில் அமரவைத்து, கட்டி அணைத்து, மகுடம் சூட்டி அழகு பார்ப்பாள்;
நீ நடப்பதிலும் பெருமை கொள்வாள்!!


இப்படிக்கு,
ஆறு மாத குழந்தை..





1 comment: